என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "பெண் பக்தர்கள்"
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் நடைபெறும் மண்டல பூஜை மற்றும் மகர விளக்கு பூஜையின் போது திரளான அய்யப்ப பக்தர்கள் குவிவார்கள்.
இது போல ஒவ்வொரு மாதமும் முதல் தேதி சபரி மலை கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி ஐயப்பனுக்கு பூஜைகள் நடைபெறும். தற்போது வைகாசி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோவில் நடை திறக்கப்பட்டுள்ளது. வருகிற 19-ந்தேதி இரவு கோவில் நடை அடைக்கப்படுகிறது. சில நாட்களே சபரிமலை கோவில் நடை திறந்து இருக்கும் என்பதால் தற்போது சபரிமலையில் அய்யப்ப பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
சபரிமலை கோவிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவதில்லை. காலம் காலமாக இந்த ஐதீகம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவைத் தொடர்ந்து தற்போது அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்குச் செல்லலாம் என்ற நிலை உள்ளது. ஆனால் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அய்யப்ப பக்தர்கள் போராட்டம் நடத்தி வருவதால் சபரிமலை நடை திறக்கும் போது எல்லாம் அங்கு பதட்டமான சூழ்நிலை ஏற்படுகிறது.
தற்போது சபரிமலை கோவிலில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தற்போது சபரிமலைக்கு பிந்து உள்பட 3 பெண்களும் சென்றால் பாதுகாப்பு பிரச்சினை ஏற்படும் என்று கருதிய போலீசார் அது பற்றி அந்த பெண்களுக்கு அறிவுரை கூறினார்கள். இதை ஏற்றுக் கொண்ட அந்த 3 பெண்களும் அங்கிருந்துச் சென்றனர்.
இதற்கிடையில் இந்த தகவல் கிடைத்து சபரிமலையில் இந்து அமைப்பினர், ஆர்.எஸ்.எஸ். மற்றும் பாரதிய ஜனதா கட்சியினர் சபரிமலையில் திரண்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் இளம்பெண்கள் சபரிமலைக்கு செல்லாமல் இருக்க மலைப்பாதையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலம் பாலக்காட்டில் நேற்று பாரதீய ஜனதா கட்சியின் இளைஞரணி மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நடந்தது. பாரதீய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித்ஷா, கூட்டத்தில் பங்கேற்றார். அவர் பேசியதாவது:-
வருகிற பாராளுமன்ற தேர்தல் மிக முக்கிய தேர்தல் இந்த தேர்தலில் மோடி தலைமையிலான ஆட்சி மீண்டும் அமைய வேண்டும். அப்போதுதான் நாடு வளர்ச்சி பாதையில் செல்லும். அதற்கு கேரள மக்கள் பாரதீய ஜனதா கட்சி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஆதரவு அளிக்கவேண்டும்.
சபரிமலை அய்யப்பன் கோவில் விவகாரத்தில் அய்யப்ப பக்தர்களுக்கு கம்யூனிஸ்டு அரசு துரோகம் செய்து விட்டது. கோவிலின் ஆச்சாரத்தை பாதுகாக்க போராடிய பக்தர்கள் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
அய்யப்ப பக்தர்களை ஏமாற்றி அவர்களுக்கு துரோகம் செய்த கம்யூனிஸ்டு அரசு அதற்கான பலனை அனுபவித்தே தீரும். பக்தர்களுக்கு நீதியை மறுத்து அநீதி இழைத்த கம்யூனிஸ்டுகள் அழிவை சந்திக்கும் காலம் நெருங்கி விட்டது.
உலகம் முழுவதும் கம்யூனிஸ்டுகள் ஓரங்கட்டப்பட்டு வருகிறார்கள். இந்தியாவில் மேற்கு வங்கம் மற்றும் திரிபுராவில் கம்யூனிஸ்டுகளின் ஆட்சி அகற்றப்பட்டு விட்டது. கேரளாவிலும் விரைவில் இந்த நிலை ஏற்படும். இங்கும் கம்யூனிஸ்டுகள் சரிவை சந்திக்கப்போவது உறுதி.
கேரளாவை ஆளும் கம்யூனிஸ்டு அரசு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படியே சபரிமலை பிரச்சினையில் நடவடிக்கை எடுத்ததாக கூறுகிறது.
சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே பிறப்பித்த இன்னொரு உத்தரவில் அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை அகற்ற வேண்டும் என்று கூறி இருந்தது. அதன்படி, அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும் கூம்பு வடிவ ஒலிபெருக்கிகள் அகற்றப்பட்டு விட்டதா? அனைத்து மசூதிகளிலும் உள்ள கூம்பு வடிவ ஒலிபெருக்கிகளை இந்த அரசு அகற்றி இருக்கிறதா?
கேரள மக்களுக்கு எந்த வளர்ச்சி திட்டங்களையும் செயல்படுத்த விடாமல் இந்த அரசு, அரசியல் செய்கிறது. கம்யூனிஸ்டுகள் ஆட்சிக்கு வந்தால் கேரளாவில் வன்முறை நடக்கும். இதுவே காங்கிரஸ் ஆட்சி நடத்தினால் ஊழல் செய்வார்கள்.
இந்த இரு கட்சியினரும் இதைதான் மாறி மாறி செய்து வருகிறார்கள். அவர்களுக்குத்தான் நீங்கள் வாக்களித்து ஆட்சியில் அமர்த்தி வருகிறீர்கள்.
இந்த முறை கேரள மக்கள் மாற்றத்தை தரவேணடும். பாரதீய ஜனதா கூட்டணிக்கு வாக்களிக்க வேண்டும். கேரளாவில் பாரதீய ஜனதா ஆட்சி அமைத்தால் இந்தியாவிலேயே முதல் மாநிலமாக கேரளா மாறும். ஊழல்வாதிகள், வன்முறையில் ஈடுபட்டோர் ஜெயிலுக்கு செல்வார்கள்.
எனவே கேரள மக்கள் பாரதீய ஜனதாவை ஆட்சியில் அமர்த்த வேண்டும். எதிர்க்கட்சி கூட்டணியில் பிரதமர் வேட்பாளரே இல்லை. ஆனால் பாரதீய ஜனதா, மோடி மீண்டும் பிரதமராக வாய்ப்பு கேட்கிறது. இம்முறை கேரள மக்கள் அந்த வாய்ப்பை தர வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார். #amitshah #bjp #communistparty
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும் அவர்கள் தடுத்து நிறுத்தினார்கள்.
அதே சமயம் சுப்ரீம் கோர்ட்டு உத்தரவை அமல்படுத்தும் விதமாக போலீஸ் பாதுகாப்புடன் பிந்து, கனகதுர்க்கா ஆகிய 2 பெண்களை சாமி தரிசனம் செய்ய கேரள மாநில அரசு நடவடிக்கை எடுத்தது. இதுபோன்ற காரணங்களால் சபரிமலை கோவில் நடை திறக்கும் போதெல்லாம் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.
இந்த நிலையில் மாசி மாத பூஜைக்காக சபரிமலை கோவில் நடை இன்று மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. வருகிற 17-ந்தேதி வரை கோவில் நடை திறந்திருக்கும். மாசி மாத பூஜையின் போதும், சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம் ஏற்பட்டுள்ளது.
இதனால் சபரிமலை சன்னிதானம், பம்பை, நிலக்கல் ஆகிய இடங்களில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுகிறார்கள்.
கடந்த காலங்களில் சபரிமலை கோவில் நடை திறந்திருந்தபோது 144 தடை உத்தரவு சபரிமலையில் பிறப்பிக்கப்பட்டிருந்தது. எனவே தற்போதும் பதட்டமான சூழ்நிலை நிலவுவதால் இன்று முதல் 17-ந்தேதி வரை சபரிமலையில் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்று போலீஸ் சார்பில் பத்தினம்திட்டா மாவட்ட கலெக்டருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
இதனால் சபரிமலையில் மீண்டும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. #SabarimalaTemple
சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு பிறப்பித்தது.
இதைத்தொடர்ந்து போலீஸ் பாதுகாப்புடன் கேரளாவை சேர்ந்த கனகதுர்கா, பிந்து ஆகிய 2 இளம்பெண்கள் சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தனர். இதை கண்டித்து கேரளாவில் ஐயப்ப பக்தர்கள் நடத்திய போராட்டம் கலவரமாக மாறியது.
இதனால் கனகதுர்காவும், பிந்துவும் உயிருக்கு பயந்து போலீஸ் பாதுகாப்புடன் ரகசிய இடத்தில் வசிக்கும் நிலை ஏற்பட்டது. அதன்பிறகு நிலைமை சற்று சகஜமானதை தொடர்ந்து கனகதுர்கா கோழிக்கோட்டில் உள்ள தனது கணவர் வீட்டிற்கு சென்றார்.
அப்போது கனகதுர்கா சபரிமலை ஆச்சாரத்தை மீறி சுவாமி ஐயப்பன் கோவிலுக்கு சென்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து அவரது மாமியார் அவரை தாக்கினார். இதில் காயம் அடைந்த கனகதுர்கா ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார்.
அதன்பிறகு தன்னை கணவர் வீட்டில் வசிக்கவும், குழந்தைகளை பராமரிக்கவும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டு கனகதுர்கா பெரிந்தல்மன்னா கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு புலாமந்தோல் கிராம கோர்ட்டுக்கு மாற்றப்பட்டது.
நீதிபதி இந்த வழக்கை விசாரித்து கனகதுர்காவை வீட்டில் அனுமதிக்க வேண்டும் என்று அவரது கணவர் கிருஷ்ணன் உண்ணிக்கு உத்தரவிட்டார். குழந்தைகளை பராமரிப்பது பற்றி பிறகு உத்தரவு பிறப்பிக்கப்படும் என்றும் நீதிபதி கூறினார். மேலும் இந்த வழக்கு விசாரணையை வருகிற மார்ச் மாதம் 31-ந்தேதிக்கு தள்ளி வைத்து உத்தரவிட்டார்.
இதற்கிடையில் கனகதுர்காவின் கணவர் கிருஷ்ணன் உண்ணி இந்த தீர்ப்பை எதிர்த்து கேரள ஐகோர்ட்டில் அப்பீல் செய்யப்போவதாக அறிவித்து உள்ளார். #Sabarimala #KanakaDurga
இந்நிலையில் ஐயப்பன் கோவில் தந்திரி கண்டரரு ராஜீவரு திருவாங்கூர் தேவசம்போர்டுக்கு 11 பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். அதில், “சித்திர ஆட்ட விழா மற்றும் மண்டல-மகரவிளக்கு விழா காலங்களில் ஐயப்பன் கோவில் பல பிரச்சினைகளை சந்தித்தது. இந்த பிரச்சினைகள் எழுந்ததால் கோவிலின் புனிதத்தை மீட்பதற்காக இதுபோன்ற பரிகார பூஜைகள் செய்ய வேண்டிய தேவை ஏற்பட்டது. டிசம்பர் 31-ந்தேதி எந்த பூஜைகளும் நடைபெறவில்லை, 1-ந்தேதி பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. அதனால் தான் 2-ந்தேதி பரிகார பூஜை செய்யப்பட்டது. பெண்கள் நுழைந்ததற்காக பரிகார பூஜை செய்ததாக கூறுவது அடிப்படை ஆதாரமற்றது” என்று கூறியுள்ளார். #Sabarimala #Tantri
பக்தர்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு வழங்க கோரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மனுதாரர்களின் கோரிக்கையை ஏற்ற நீதிபதிகள், அவர்கள் இருவருக்கும் 24 மணி நேரமும் உரிய போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என கேரள காவல்துறைக்கு உத்தரவிட்டனர். #Sabarimala #SabarimalaWomen #SupremeCourt
இதற்கு மத்தியில் கேரளாவைச் சேர்ந்த கனகதுர்கா ( 44), பிந்து (42) ஆகிய இரு பெண்கள் பலத்த பாதுகாப்புடன் சபரிமலை ஐயப்பன் கோவிலில் வழிபட்டனர். பாதுகாப்பு கருதி, இவர்கள் இருவரும் மாநில அரசின் பாதுகாப்பின் கீழ் உள்ளனர். இந்த சூழலில், கடந்த செவ்வாய்க்கிழமை மலப்புரத்தில் உள்ள தனது கணவர் வீட்டுக்கு கனகதுர்கா சென்றார். அப்போது, கனகதுர்காவை அவரது மாமியார் கடுமையாக தாக்கியதாக கூறப்பட்டது. இதில் கனகதுர்கா பலத்த காயம் அடைந்தார். உடனடியாக மருத்துவமனையில் கனகதுர்கா அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில், சபரிமலை கோவில் சென்று வழிபட்ட இரு பெண்களும், தங்களுக்கு பாதுகாப்பு கருதி உச்சநீதிமன்றத்தில் மனு செய்தனர்.
அந்த மனுவில், “அனைத்து வயதுப் பெண்களையும் சபரிமலை கோவிலில் தரிசனம் செய்ய அனுமதிக்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். எங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் எழுந்துள்ளதால், வாரத்தில் ஏழு நாள்களும் 24 மணி நேரமும் போலீஸ் பாதுகாப்பு அளிக்க உத்தரவிட வேண்டும். எங்களுக்கு எதிராக தவறான சொற்களைப் பயன்படுத்துபவர்கள், சமூக வலைதளங்களில் எங்களை விமர்சிப்பவர்கள் ஆகியோருக்கு எதிராக சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தனர். இந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வரவுள்ளது. #Sabarimala #SabarimalaVerdict
இவ்வாறு பாதுகாப்புடன் செல்லும் பெண்களுக்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடத்துகின்றனர். இதனால் பல பெண்கள் தங்கள் பயணத்தை பாதியிலேயே முடித்துக்கொண்டு திரும்ப நேர்ந்தது.
இந்நிலையில் கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்த ரேஷ்மா, ஷானிலா ஆகியோர் இன்று காலை பம்பையில் இருந்து சபரிமலை சன்னிதானம் நோக்கி புறப்பட்டனர். இதுபற்றி தகவல் அறிந்த பக்தர்கள் அந்த பெண்களை முன்னேற விடாமல் நீலிமலையில் தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்தினர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் கூட்டம் அதிகரித்து. இதனால், 2 பெண்களும் போலீஸ் பாதுகாப்புடன் பம்பை திரும்பினர். #SabarimalaProtest #WomenEntry
திருவனந்தபுரம்:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் இளம்பெண்கள் இருவர் தரிசனம் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த 3-ந்தேதி கேரளாவில் அய்யப்ப பக்தர்கள் முழு அடைப்பு போராட்டம் நடத்தினார்கள்.
முழு அடைப்பு போராட்டம் காரணமாக கேரளாவில் வன்முறை, கலவரங்கள் மூண்டன. அரசு பஸ்கள், பொது சொத்துக்கள் சேதப்படுத்தப்பட்டன. கம்யூனிஸ்டு கட்சி அலுவலகங்கள், எம்.பி., எம்.எல். ஏ.க்கள் வீடுகள் மீதும் தாக்குதல் நடந்தது. அய்யப்ப பக்தர் ஒருவரும் பலியானார்.
முழு அடைப்பு நடந்து 3 நாட்கள் ஆன பின்பும் கேரளாவில் இன்னும் பல இடங்களில் தகராறு ஓயவில்லை.
கேரளாவில் தொடரும் வன்முறை குறித்து பாரதீய ஜனதா கட்சி கடும் கண்டனம் தெரிவித்தது. கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளர் நரசிம்மராவ் கூறும்போது, கேரள அரசு வன்முறையை தடுக்காவிட்டால் அரசியல் சட்ட விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று எச்சரித்தார்.
இதற்கிடையே மத்திய உள்துறையும், கேரள அரசிடம் அறிக்கை கேட்டது. இந்த விவகாரம் தொடர்பாக கேரள முதல்-மந்திரி பினராய் விஜயன் பேஸ்புக்கில் கருத்து பதிவிட்டுள்ளார். அதில் கூறி இருப்பதாவது:-
கேரளாவில் இப்போது சட்டம்-ஒழுங்கு கட்டுப்பாட்டில் உள்ளது. வன்முறையில் ஈடுபடுவோர் கைது செய்யப்பட்டு வருகிறார்கள். அரசியலுக்கு அப்பாற்பட்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக கேரளாவில் நடக்கும் போராட்டங்களுக்கு பாரதீய ஜனதா, ஆர்.எஸ்.எஸ். அமைப்புகளே காரணம்.
கேரள அரசுக்கு எந்த மிரட்டலும் இல்லை. மக்களின் அமைதியான வாழ்வுக்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பது அரசின் கடமை. அதை அரசு தொடர்ந்து செய்யும். மாநிலத்தில் கால் ஊன்ற சங்பரிவார் அமைப்புகளே கலவரத்தை தூண்டுகிறார்கள்.
இவ்வாறு அதில் கூறி உள்ளார். #pinarayivijayan #sabarimala #rss #bjp
திருச்சி:
திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்க வந்த பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-
இடதுசாரி சிந்தனையும், நாத்திக சிந்தனைகளும் இந்த நாட்டின் அறிவு களஞ்சியங்களை அழித்திருக்கின்றன. இந்த நாத்திக, கம்யூனிச, தீய சக்திகள் தான் கொஞ்சம், கொஞ்சமாக இந்து கலாசாரம், பண்பாடு ஆகியவற்றை அழிக்க வேண்டும் என்று தீய நோக்கத்தோடு செயல்படுகின்றன.
மதமாற்றம், தீய சக்திகளின் பிரதிநிதியாக இருக்கின்ற கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன், மோசடியாக சபரிமலையின் புனிதத்தை கெடுக்கும் வகையில் செயல்பட்டிருக்கிறார் என்பது வெட்ட வெளிச்சமாக தெரியவந்துள்ளது. நாத்திகர்கள், தீய எண்ணம் கொண்டவர்கள் அய்யப்பன் கோவிலை ஒரு ‘ரிசார்ட்’ போல் நடத்த வேண்டும் என நினைக்கின்றனர்.
பிரவம் தேவாலயத்தில் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பை கேரள அரசு செயல்படுத்தவில்லை. பள்ளிவாசல்களில் கூம்பு வடிவ ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என தீர்ப்பு உள்ளது. ஆனால் அதனை எடுக்கவில்லை. தீய நோக்கத்தோடு இந்து மதத்தை அழிப்பதற்காக மதமாற்ற தீய சக்திகளோடு சேர்ந்து செய்த செயல் வன்மையாக கண்டிக்கத்தக்கது.
தமிழகத்திலும் இந்து புனித தலங்கள், கோவில்கள் இருக்கிற இடத்தில் மாற்று மதத்தினர் தீயநோக்கத்தோடு அதனை ஆக்கிரமிக்கின்றனர். இதேபோல கேரளாவில் கிறிஸ்தவ மதமாற்ற சக்திகளிடம் சபரிமலையை ஒப்படைப்பதற்காக ஒரு தீய நோக்கத்தோடு செயல்படுகிற பினராயி விஜயனின் செயலை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது. பா.ஜ.க. வின் இந்த போராட்டம் தொடரும்.
பள்ளிவாசல்களில் பெண்கள் செல்வது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு எதுவும் சொல்லவில்லை. காரணம் மதம் சார்ந்ததில் மதங்கள் முடிவு செய்து கொள்ளும், நீதிமன்றம் அல்ல. இதனை மக்கள் தெளிவாக புரிந்திருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார். #hraja #communistparty #pinarayivijayan #sabarimala
சென்னை:
சபரிமலை அய்யப்பன் கோவிலில் 2 பெண்கள் சாமி தரிசனம் செய்ததற்கு கடும் எதிர்ப்பு வலுத்துள்ளது. பாரதீய ஜனதா மற்றும் இந்து இயக்க பொறுப்பாளர்கள் கேரள அரசை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.
சென்னை பல்லாவரத்தில் சபரிமலை பாதுகாப்பு இயக்கம் சார்பில் அதன் தலைவர் துரைசங்கர் தலைமையில் போராட்டம் நடந்தது. இதில் பாரதீய ஜனதா கட்சியின் மாநில தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் கலந்து கொண்டார். 100-க்கும் மேற்பட்ட நிர்வாகிகளும் போராட்டத்தில் பங்கேற்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் கொடும்பாவி போராட்டத்தின்போது தீ வைத்து கொளுத்தப்பட்டது. இது தொடர்பாக தமிழிசை சவுந்தரராஜன் உள்ளிட்ட 150 பேர் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்யப் பட்டுள்ளது.
இந்து முன்னணி மாநில பொதுச்செயலாளர் பக்தன், விசுவ இந்து பரிசத் மாநில செயலாளர் ராமன், பா. ஜனதா கோட்ட பொறுப்பாளர் பாஸ்கர், தேசிய பொதுக்குழு உறுப்பினர் செம்பாக்கம் வேத சுப்பிரமணியன், மாவட்ட தலைவர்கள் மோகனராஜா, பாஸ்கர் உள்ளிட்டோர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது.
சென்னை ஆயிரம்விளக்கு கிரீம்ஸ் ரோட்டில் கேரள அரசின் சுற்றுலாத் துறைக்கு சொந்தமான ஓட்டல் ஒன்று உள்ளது. இந்த ஓட்டலில் நேற்று இரவு 10-க்கும் மேற்பட்டவர்கள் இரவு கல்வீசி தாக்கினர். இதில் ஓட்டல் கண்ணாடி உடைந்தது. யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
இதுபற்றி ஓட்டல் பொது மேலாளர் அளித்த புகாரின் பேரில் ஆயிரம்விளக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இச்சம்பவம் தொடர்பாக இந்து முன்னணி ஆயிரம் விளக்கு பகுதி பொறுப்பாளரான பார்த்தசாரதி கைது செய்யப்பட்டார். மேலும் 7 பேரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதற்கிடையே தாக்குதலுக்குள்ளான ஓட்டலை மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்டு கட்சியின் தமிழ் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் இன்று காலை பார்வையிட்டார்.
தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து கேரள ஓட்டல் முன்பு நுங்கம்பாக்கம் உதவி கமிஷனர் முத்துவேல்பாண்டி தலைமையில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
சென்னையில் கேரள நிறுவனங்கள் செயல்படும் பகுதியில் போலீசார் ரோந்தும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். #PinarayiVijayan #sabarimala #bjpprotest #tamilisai
சபரிமலையில் இன்று இளம்பெண்கள் பிந்து, கனகதுர்கா இருவரும் சன்னிதானம் சென்று ஐயப்பனை தரிசித்தனர்.
இந்த நிலையில் இன்று இளம்பெண்கள் இருவர் சபரிமலை சன்னிதானம் சென்றதை அறிந்ததும் பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமாரவர்மா அதிர்ச்சி அடைந்தார்.
இவரைப்போல கோவில் தந்திரிகள், அர்ச்சகர்களும் இந்த சம்பவத்தால் பெரும் அதிர்ச்சிக்கு ஆளானார்கள். அவர்கள் இதுபற்றி கோவில் மேல்சாந்தி, தலைமை தந்திரி ஆகியோருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து கோவில் நடை உடனடியாக அடைக்கப்பட்டது. சாமி தரிசனமும் நிறுத்தப்பட்டது.
இதுபற்றி பந்தளம் ராஜ குடும்ப பிரதிநிதி சசிகுமார வர்மா கூறியதாவது:-
சபரிமலை கோவில் சன்னிதானத்தில் இளம்பெண்கள் இருவர் நுழைந்ததாக தகவல் வந்துள்ளது. இதற்காக கோவிலில் பரிகார பூஜை நடத்தப்படும்.
எந்த வயதை சேர்ந்த பெண்கள் வந்தார்கள் என்பதை உறுதிசெய்த பின்பு தந்திரிகளுடன் கலந்து ஆலோசித்து பரிகார பூஜை நடத்தப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்நிலையில் ஒரு மணி நேர பரிகார பூஜைக்குப் பின்னர் சபரிமலை கோவில் நடை மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். #SabarimalaTemple #PurificationRituals #SabarimalaProtest
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்